×

பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் நெசவு தொழிலாளி வீட்டில் புகுந்த நல்ல பாம்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை அருகே கேஎஸ்பி நகரில் வசிப்பவர் ஏகாம்பரம். இவரது மனைவி மங்களா. நெசவு தொழில் செய்கின்றனர். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படிக்கட்டின் கீழே உஸ் உஸ் என்ற சத்தம் கேட்டது. இதனால், சந்தேகமடைந்த அவர்கள், அங்கிருந்த நெசவு கட்டைகளை அகற்றினர். அதன் கீழ் பகுதியில் சுமார் 5 அடி நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ஏகாம்பரம், அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், அங்கிருந்த நல்ல பாம்பை விரட்ட கட்டையால் நகர்த்தும் போது திடீரென சீறி படமெடுத்து ஆடியது. இதை கண்டதும், அலறியடித்து கெண்டு ஓடினர். பின்னர், சிறிது நேரம் கழித்து, பாம்பை விரட்டினர். அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கின்றனர். நெசவு செய்யும் பகுதியில் தேவையற்ற மரக்கட்டைகளை ஒதுக்குப்புறமாக போட்டு வைத்ததால், அங்கு பாம்பு தஞ்சமடைந்தது.


Tags : house ,public ,weaving worker , Public flow, weaver, homemade, good snake
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்