×

புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் நீக்கம்

சென்னை: புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் பு.தே.பாஸ்கர், ஒன்றியத் தலைவர் ஏ.கே.சுதாகரன் ஆகியோர் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு முரணாக, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியும், நிர்வாகிகள் மத்தியில் கலகத்தை விளைவித்தும், கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரும் சில நபர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டே சமூக வலைதளங்களில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினை ஆலோசித்து மேற்கண்ட இருவரும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கிவைக்கப்படுகின்றனர். மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கும் வரை ஒன்றிய தீவிரவாதத்தை வழிநடத்திச் செல்ல ஏதுவாக 20 நபர்கள் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது. அனைத்து கிளை நிர்வாகிகளும் நிர்வாகக் குழுவினர் குழுவினருடன் இணைந்து செயல்பட வேண்டும், மேலும் கட்சியை பலப்படுத்தி புதிய கிளைகளை உடனடியாக துவங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.   


Tags : Revolutionary Bharat Party ,executives , Revolutionary Bharat, party executives, dismissal
× RELATED பூவை மூர்த்தி நினைவுதினம் புரட்சி பாரதம் கட்சியினர் அஞ்சலி