×

மழை விட்டும் விடாத தூவானம்

கொரோனா முதலில் பரவியபோது, நுரையீரலை மட்டுமே தாக்கி, சுவாச மண்டலத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் என்றுதான் கூறப்பட்டது. பின்னர், நரம்பு மண்டலம், இருதயம், ஜீரண மண்டலம், சிறுநீரகம் உட்பட எல்லா உறுப்புகளையும் தாக்குவது தெரிய வந்தது. மருத்துவ உலகத்துக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, நோயால் பாதித்த போதும், குணமான பிறகும் கூட இதயக் கோளாறுகள் அதிகளவில் இருப்பதாக பெரும்பாலானவர்கள் கூறி இருக்கின்றனர். இது பற்றி மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி, தொற்றில் இருந்து குணமான 100 நோயாளிகளைப் பரிசோதித்ததில், அவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு, மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இதய அழற்சி புதிதாக உண்டாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, இன்னும் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என்று மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

* குணமான 80% பேர் இதயத்தில் தொல்லை: நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்பு
குணமான நோயாளிகளின் இதயத்தசைகளில் அழற்சி ஏற்பட்டிருப்பதும், அதன் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஸ்கேன் மூலம் உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக, ‘டிரோபோனின் டி’ என்ற இதய மூலக்கூறு, இதயத்தசைகளில் மிகுதியாகத் தூண்டுதல் அடைந்துள்ளது ஆய்வில் உறுதியாகி இருக்கிறது.


Tags : Rain, drizzle, drizzle
× RELATED திருச்சியில் இருந்து பெற்றோர் வர...