×

ஒருமுறை குணமாகி விட்டால் 2வது முறை தாக்குமா? விஞ்ஞானிகள் விளக்கம்

வாஷிங்டன்: ஒருமுறை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு மறுமுறை தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு அமெரிக்க ஆய்வாளர்கள் பதில் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் அதே பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக கருத்து நிலவுகிறது. டெல்லியில் சமீபத்தில் கூட, இந்நோயில் இருந்து மீணட போலீஸ்காரர் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த பிரச்னை பற்றி உலகளவில் தற்போது ஆய்வுகள் நடந்து வருகிறது.

பொதுவாக, எந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தாலும் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் இருக்கும். 3 மாதம் வரை இருக்கும் ஆன்டிபாடிகள் மீண்டும் அந்த தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும். கொரோனா விஷயத்திலும் இது பொருந்தும் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். கொரோனாவை பொறுத்த வரை ஒருமுறை வைரஸ் பாதித்து மீண்டவர்களுக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதை உறுதியாக கூற முடியாது என்றாலும், மீண்டும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

ஒருவேளை கொரோனாவிலிருந்து மீண்டும் சில வாரங்களில் ஒருவர் மீண்டும் அதே பாதிப்புக்கு ஆளானால், முதலில் வந்த நோய் தொற்றின் எச்சங்களே அதற்கு காரணமாக இருக்குமே தவிர, புதிதாக அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. அதேபோல், மறுமுறை நோயால் பாதித்தவரிடம் இருந்து வேறு யாருக்கும் வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா ஆன்டிபாடிகள் 3 மாதம் வரை மட்டுமே உடலில் தங்கியிருக்கும். அதன்பின் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என சில ஆய்வு முடிவுகள் கூறினாலும், அதனை இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் உறுதிபடுத்த முடியாது என்கிறார் அமெரிக்காவின் போஸ்டன் கல்லூரியின் உலகளாவிய பொது சுகாதார திட்ட இயக்குநர் பிலில் லாங்டிரிகன்.

வைரசுக்கு எதிராக ஆன்டிபாடிகள் மட்டும் எதிர்த்து போராடாது. நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பிற அமைப்புகளும் வைரசை எதிர்த்து போராடும் என்பதால் இரண்டாவது முறையாக கொரோனா பாதிக்க வாய்ப்பில்லை. அப்படியே பாதித்தாலும் அதன் வீரியம் மிக குறைவாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒருமுறை கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு, 2வது முறையாக அது தாக்க வாய்ப்பில்லை. அப்படியே பாதித்தாலும், அதன் வீரியம் மிக குறைவாகவே இருக்கும்.

Tags : Scientists , Once healed, will it strike a second time ?, scientists explain
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு