×

அமெரிக்க நண்பருடன் ஓரினச் சேர்க்கை பர்ஸ்ட் நைட்டை விரும்பாத புதுமாப்பிள்ளை: இல்லற வாழ்க்கையில் நுழைந்த புதுப்பெண் அதிர்ச்சி

திருமலை: அமெரிக்க நண்பருடன் ஏற்பட்ட ஓரினச்சேர்க்கையால் ‘பர்ஸ்ட் நைட்’ விரும்பாத புதுமாப்பிள்ளையால் இல்லற வாழ்க்கையில் நுழைந்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்தார். புதுமாப்பிள்ளை மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் குண்டூரில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய குண்டூரை சேர்ந்த 25 வயது பெண்ணை தேர்வு செய்து நிச்சயம் செய்தனர். நாடு திரும்பிய வாலிபருக்கும், அப்பெண்ணுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது, சீதனமாக 70 பவுன், ரூ.50 லட்சம் வழங்கினர்.

கொரோனா காரணமாக முக்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்து எளிய முறையில் திருமணம் செய்தனர். அன்றிரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க மகிழ்ச்சியுடன் அறைக்கு வந்த பெண்ணுக்கு ஏமாற்றம் தொடங்கியது. புதுமாப்பிள்ளை தனக்கு உடல்நிலை சரியில்லை. இன்னொரு நாள் பார்க்கலாம் என கூறி உறங்கிவிட்டாராம். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் வாலிபர் இவ்வாறே நடந்து கொண்டாராம். இதனால், ஏமாற்றமடைந்த புதுப்பெண், யாரிடமும் சொல்ல முடியாமல் வேதனை அடைந்தார். இறுதியில் தனது தோழிகள் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், புது மாப்பிள்ளையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வாலிபரிடம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விசாரித்தனர். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு உண்மையை கூறினார்.

அதில், தனக்கும் அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டு நல்ல புரிதலுடன் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், பெண் மீதான மோகம் தனக்கு இல்லை எனவும் கூறினார். இதைக்கேட்ட புதுப்பெண்ணும்,  பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக, குண்டூர் புறநகர் போலீசில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விநோத சம்பவத்தால், இரு குடும்பமும் செய்வதறியாது தவித்து வருகிறது.

Tags : Newcomer ,American , With American Friend, Homosexuality, First Night, New Groom, Home Life, Newly Entered, Shock
× RELATED குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி