×

கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவை சேர்ந்த 149 பேர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தனர்: உளவுத்துறை திடுக்கிடும் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 149 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், காசர்கோடு, பாலக்காடு உட்பட சில மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 24 பேர் கடந்த 2016ம் ஆண்டு சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உறுதிப்படுத்துவது போல், கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகளவில் செயல்பட்டு வருவதாக ஐநா அமைப்பு சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், மத்திய உளவுத்துறை இது தொடர்பான அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘2017 முதல் 2019 வரை கேரளாவை சேர்ந்த மேலும் 149 பேர், வெளிநாடுகளுக்கு சென்று ஐஎஸ்  இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பலர் தொடர்பு  வைத்துள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* ‘ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ள 149 பேரும், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
* இவர்களில் 32 பேர் வளைகுடா நாடுகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.
*  149 பேரில்,100 பேர் தங்களின் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால், இக்குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்களும் தீவிரவாதிகளாக மாறி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


Tags : IS ,Kerala , In the last 3 years, Kerala, 149 people, joined the IS movement, intelligence
× RELATED கேரளாவில் மின்னணு இயந்திர பிரச்னை...