×

ஆன்லைனில் பிபா கூட்டம்

உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபாவின் 70வது  பொதுக்குழு கூட்டம்  செப்.18ம் தேதி எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் நடைபெற இருந்து. கால்பந்து சங்கங்களின் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தனர். கொரோனா பீதி காரணமாக இந்த கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என்று பிபா அறிவித்துள்ளது.இந்த கூட்டத்தில்  2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை,இந்தியாவில் 2021ம் ஆண்டு நடைபெறும் யு17 பெண்கள் உலக கோப்பை போட்டி உட்பட சர்வதேச போட்டிகள்,  கொரோனாவால் கால்பந்து சங்கங்கள் சந்தித்து வரும் சவால்கள், பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

Tags : meeting ,FIFA , Online, FIFA meeting
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்