×

லிவர்பூல் பயிற்சியாளருக்கு விருது

லண்டன்: லிவர்பூல் அணி முதல் முறையாக இங்லிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து கோப்பையை கைப்பற்றக் காரணமான பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இங்லிஷ் பிரிமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வந்த லிவர்பூல் அணி, இந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணம் அணியின் பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் (53). ஜெர்மனி கால்பந்து வீரரான இவர் 2015ம் ஆண்டு முதல் லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஈஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனாக லிவர்பூல் இருப்பதற்கும் இவர்தான் காரணம். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திய ஜர்கன், சிறந்த பயிற்சியாளருக்கான சர் அலெக்ஸ் பெர்குசன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஜர்கன் கூறுகையில், ‘விருதுக்கு தேர்வானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சக குழுவினர் பங்களிப்பு இல்லாமல் இதனை சாதித்திருக்க முடியாது. ரசிகர்களின் ஆதரவுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

* எம்மா ஹேய்ஸ் தேர்வு
சிறந்த பெண் பயிற்சியாளராக செல்சியா பெண்கள் அணியின் பயிற்சியாளர் எம்மா ஹேய்ஸ்(43) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த எம்மா 2012ம் ஆண்டு முதல் செல்சியா அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு செல்சியா அணி ‘எப்ஏ பெண்கள் சூப்பர் லீக்’ சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் எம்மா. அதுமட்டுமல்ல 15 போட்டிகளில் 12வெற்றி, 3 டிரா என ஒன்றில் கூட செல்சியா தோற்கவில்லை. இதற்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ ரெட் ஸ்டார்ஸ் பெண்கள் அணியின் பயிற்சியாளராக எம்மா இருந்துள்ளார்.

Tags : coach ,Liverpool , Liverpool, coach, award
× RELATED தண்டவாளத்தில் மாடு வந்ததால் விபத்து...