×

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது

சென்னை: நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ் சினிமாவில் 12 பி, தில்லாலங்கடி, இன்பா, தூண்டில், உள்ளம் கேட்குமே, லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஷாம் (42). கிழக்கு கடற்கரை சாலையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு  ரகசிய தகவல் கொடுத்தனர்.

அதன்படி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஷாம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஷாம், பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வரும் ராமாபுரத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன்(31), பிரபல ரெஸ்ட்டாரன்ட்டில் வேலை செய்யும் சித்தார்த் (31), சாஸ்திரி நகரை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஆனந்த் (33), குரோம்பேட்டையை சேர்ந்த நந்தகிஷோர்(39), நுங்கம்பாகத்தில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மகன் பட்டேல்(26), ஷாம் வீட்டு வேலைக்காரர் வசந்த்(38), மணி(26), பக்ரூபா(29), அடையாரை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் நசீர்(41), விருகம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(33), அண்ணாநகரை சேர்ந்த இன்ஜினியர் சைமன்(34), கவுசிக்(30) ஆகிய 13 பேரை கைது செய்தனர். பின்னர்  இவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : gambling actor ,apartment , In the apartment, gambling, actor Sham, 13, arrested
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...