×

சென்னையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடக்கம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி..!!

சென்னை: சென்னையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,27,688-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமான சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வந்ததை போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,107 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 769 பேர் குணமடைந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,852-ஆக உள்ளது.

இதனையடுத்து, தற்போது சென்னையில் கொரோனா விழுப்புணர்வு வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: சென்னையில் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 4,000 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், நோய்த் தொற்றுள்ளவா்களை விரைவாகக் கண்டறியும் வகையில் பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டது. சென்னையில் நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 23,000 காய்ச்சல் முகாம்கள் மூலம் இதுவரை 14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு முன் கொரோனா அறிகுறி இருந்தால் கொரோனா சந்தேக வார்டில் அவர்கள் தனிமைப்படுத்திய பின், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் பெற விரும்புவோர் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்தால் நிச்சயம் இ-பாஸ் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : hospitals ,Corporation Commissioner ,Chennai ,Corona , Chennai, Corona, Ward Division, Initiation, Corporation Commissioner, Interview
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...