×

தண்டவாளத்தில் ஓடும் சைக்கிள்: டிராக்மேன்களுக்கு வரப்பிரசாதம்

புதுடெல்லி: ரயில் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்ட பகுதி ரயில் நிலையத்திலிருந்து தொலைவில் இருந்தாலும் அந்த இடத்துக்கு டிராக்மேன் எனப்படும் பராமரிப்பாளர்கள் நடந்து சென்றுதான் பழுதை நீக்க முடியும். இந்த நிலையில் பழுது ஏற்பட்டு இருக்கும் பகுதிக்கு விரைந்து செல்லும் விதமாக தண்டவாளத்தில் ஓட்டக்கூடிய சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாம் சாதாரணமாக ஓட்டும் சைக்கிளில் சிறிது மாற்றங்கள் செய்து இந்த ரயில் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

இரும்புக் கம்பியினால் முன்பக்க சக்கரம் மற்றும் பக்கவாட்டில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட இரும்பு சக்கரங்கள் ரயில்வே தண்டவாளங்களில் அப்படியே பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசரமாக பழுதுபார்க்கும் பணி எதுவும் இருந்தால் இந்த ரயில் சைக்கிளை பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றடைய முடியும். இதனால் நேரத்தை போதுமான அளவு மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

Tags : Bicycle running on rails, trackman
× RELATED காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்?: உமர் அப்துல்லா கேள்வி