×

காரைக்குடி அருகே இடியும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்

காரைக்குடி: காரைக்குடி அருகே நங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடியும் அபாயம் உள்ளது. மாற்று இடத்தில் பள்ளி கட்டிதர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நங்கப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறனர். 40 ஆண்டுகள் ஆனதால் பள்ளி கட்டிடம்  பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைகாலங்களில் ஒழுகுகிறது. சேதமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.

எனவே மாற்று இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெரியசாமி கூறுகையில், ‘கட்டிடம் சேதமடைந்துள்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. எனவே 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கானாடுகாத்தனுக்கு குழந்தைகளை அனுப்புகிறோம். ஆட்டோ கட்டணம் தர முடியவில்லை. விடுமுறை காலத்திலேயே எங்களுக்கு புதிய பள்ளி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பள்ளத்தூர் கேஎஸ் ரவி கூறுகையில், ‘கிராம மக்கள் இடத்தை தேர்வு செய்து தந்தால் பெரியகருப்பன் எம்எல்ஏவிடம் கூறி தொகுதி வளர்ச்சி நிதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட தேவையான நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.


Tags : Government school building ,thunderstorm ,Karaikudi , Karaikudi, Government School, Building
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்