×

இந்த பூமியில் இனி போர் நடக்காது: கொரியாவுடனான போர் முடிவு ஒப்பந்த 67-வது ஆண்டு விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சு..!!

பியாங்யாங்: கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக 67-வது ஆண்டு விழா வடகொரியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந்நாட்டு மக்களை ஆரவாரப்படுத்தி உள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அதிபர் கிம் ஜாங் உன், “ வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. வடகொரியாவின் நம்பகமான  திறன் மிக்க அணு ஆயுதங்களால் உலகில் இனி போர் நடக்காத சூழல் உருவாகியுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதனையடுத்து வடகொரியாவில் நடத்தப்படும் அணு ஆயுத சோதனை,  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கிம் ஜாங் அன்,  இனி போர் நடக்காது என்று பேசியிருப்பது சர்வதேச வல்லுநர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.


Tags : Kim Jong Un ,war ,earth ,Korea ,North Korean ,speech ,end , War, End, North Korean President, Kim Jong Un, Speech
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?