நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு..!!

மும்பை: பாலிவுட் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரில் நடிகை ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங், மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, சுஷாந்தின் நண்பர்கள், இயக்குனர்கள், அவர் சிகிச்சை பெற்ற டாக்டர், சக நடிகர், நடிகைகள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் 3 பேர் மற்றும் உளவியலாளரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் திரிமுகே கூறுகையில், ‘‘அவர்களிடம் கடந்த 3 முதல் 4 நாட்களாக பாந்திரா போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்’’ என்றார்.  இதேபோல போலீசார் திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசாந்திடமும் விசாரணை நடத்தி உள்ளனர். இவரிடம் சுஷாந்த் சிங்கின் படத்திற்கு வழங்கிய விமர்சனம், மதிப்பீடுகள் குறித்து கேட்டு வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது குற்றம் சாட்டப்படும் நிலையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>