இடுகாட்டில் சிதையிலிருந்து அகற்றப்பட்ட தலித் பெண் உடல்: உ.பி அரசு விசாரணை நடத்த மாயாவதி கோரிக்கை

ஆக்ரா: ஆக்ரா அருகே இடுகாட்டில் சிதையிலிருந்த தலித் பெண் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டது. அந்த இடுகாடு உயர்சாதிப் பிரிவினருக்கானது என்று கூறி சிதையிலிருந்த தலித் பெண் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து பகுஜன் தலைவர் மாயாவதி விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா அருகே தலித் பெண்ணின் உடலை சிதையிலிருந்து அகற்றி, அங்கு அவரை எரிக்கக் கூடாது என்று அடாவடியாக நடந்து கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சாதிவெறி பிடித்த செயல் குறித்து உத்தரப் பிரதேச அரசு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைப் பிடித்து தகுந்த தண்டனை அளித்தால் இனி இது போன்று நடக்காது. இதுதான் பகுஜன் சமாஜ் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கொரோனாவினால் டெல்லியில் மரணமடைந்த மத்தியப் பிரதேச தலித் பிரிவு மருத்துவர் குடும்பத்துக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். டெல்லி அரசு படிப்புக்காக கடன் பெற்ற அந்த மருத்துவர் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>