×

சென்னையில் இடி,மின்னலுடன் பலத்த கனமழை...! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!!

சென்னை:  சென்னையில் இடிமின்னலுடன்  கூடிய கனமழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த சில வாரங்களாகவே மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே மிதமாக பெய்து வந்தது. இதனால் அடிக்கடி மின்சாரமானது துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது, வடமேற்கு  திசையில் வீசும் கடல் காற்று காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதாவது, போரூர், வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல், ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும், கே.கே.நகர், அசோக் நகர், சாலி கிராமம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, சூளைமேடு, அமைந்தகரை, எம்.எம்.டி.ஏ., கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால், அப்பகுதி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பரவலாக பலத்த மழை பெய்து வருவதால்  அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும்  பரவலான இடங்களில் தண்ணீர் தேங்கியதால்  வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. அதாவது அம்பத்தூர், பாடி, முகப்பேர், ஆவடி, மற்றும் பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருமளவு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவாகியுள்ளது.

Tags : Chennai , Chennai, heavy rain, people happy
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!