×

சிபிஐ அதிகாரி 6 பேர் உட்பட சிறை காவலர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!சாத்தான் குளம் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சென்னை அதிகாரிகளை அழைத்து வர திட்டம்!!!

மதுரை:  சிபிஐ அதிகாரிகள் 6 பேரை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாத்தான் குளத்தில் 2 வியாபாரிகள் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக டெல்லியில் இருந்து வந்த 8 அதிகாரிகளில் 5 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், வியாபாரிகள் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரிடம் விசாரணையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் பால்துறையுடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 5 பேர், அவர்களுக்கு உதவி செய்த மதுரையை சேர்ந்த சிபிஐ அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் கொலை வழக்கை விசாரித்து வரும் 6 பேர், குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் என மொத்தமாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து கூடுதல் அதிகாரிகளை வரவழைக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : prison guards ,CBI , Two prison guards,6 CBI officers,, corona ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...