×

10 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு A,B,C என்ற கிரேடுகளில் மதிப்பெண்களை வழங்கலாமா ? சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, காலாண்டு மற்றும் அரையாண்டுகளில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீதமும், வருகை பதிவேட்டை வைத்து 20 சதவீதம் மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பல பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள்களை சரியாக பராமரிக்காததால் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்குவதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் சி.பி.எஸ்.சி-யில் வழங்குவது போல் 10 வகுப்பு மாணவர்களுக்கு A,B மற்றும் C என்ற மூன்று கிரேடுகளில் மதிப்பெண்களை வழங்கலாமா என்று அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகளை உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களின் அடிப்படையில் எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Senkottayan ,Chennai , 10th class students ,grades A, B, C th,Minister Senkottayan,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...