×

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கொடைக்கானல்:  ஊரடங்கை மீறி கொடைக்கானலில் சுற்றி திரிந்த நடிகர்கள் விமல், சூரி மீது 2 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொடைக்கானல் ஏரியில் கடந்த 17ம் தேதி பிரபல நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் 2 இயக்குனர்களுடன் வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக கடத்த 3 மாதங்களாக கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எவ்வித அனுமதியும் பெறாமல் கொடைக்கானலுக்கு வந்தது மட்டுமல்லாமல், பாதுகாக்கப்பட்ட பேரிஜம் ஏரிப்பகுதிக்கு சென்று மீன்பிடித்து விமல், சூரியுடன் இணைந்த குழுவினர் கும்மாளம் போட்டுள்ளனர்.

இதனையறிந்த கொடைக்கானல் பேக்குப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த வனத்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சுற்றுச்சூழல் வனக்காவலர் சைமன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அருண், பிரபு ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோருக்கு தலா 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஊரடங்கு விதிகளை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது.

Tags : Wimal ,Kodaikanal Perijam Lake ,Suri ,Vimal , Actors Vimal and Suri,fishing , Kodaikanal ,
× RELATED நில மோசடி விவகாரத்தில் நடிகர் சூரி...