×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஒரு உலகின் மருந்தகம் என்பதை நிரூபித்துள்ளது : மத்திய அமைச்சர் பெருமிதம்!!

டெல்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஒரு உலகின் மருந்தகம் என்பதை நிரூபித்துள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். உள்நாட்டின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் 4 புதிய திட்டங்களை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவை மருந்தியியல் துறையில் சுயசார்புடைய நாடாக மாற்றுவதற்கு இந்த திட்டங்கள் உதவும் என்று தெரிவித்தார்.மொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ சாதன பூங்காக்களுக்கு தலா 2 திட்டங்கள் என்ற அடிப்படையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதையும் அனைத்து மாநிலங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

உலக அரங்கில் இந்தியா உலகின் மருந்தகம் என்று குறிப்பிடப்படும் நிலையில், குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இந்த கூற்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிர் காக்கும் மருந்துகளை இந்தியா தொடர்ந்து தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் உள்நாட்டிலேயே மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கவுடா தெரிவித்தார். இதனிடையே நாட்டில் 3000 கோடி ரூபாய் செலவில் மொத்தம் மருந்துகளை உற்பத்தி செய்யும் 3 மருந்தியல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த மருந்து உற்பத்தி பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் 100 கோடி ரூபாய் செலவில் 4 மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : India ,Union Minister , Corona, Prevention, Measures, India, World, Pharmacy, Proven, Union Minister, Proud
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!