×

நாங்குநேரி காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 7 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாங்குநேரி காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 3 நாட்கள் மூடப்படும் என்றும் அதுவரை அருகில் உள்ள கட்டிடத்தில் காவல்நிலையம் செயல்பட்டு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : guards ,police station ,Nanguneri , Nanguneri Police Station, Police, Corona Infection
× RELATED காவல்துறையில் மனிதநேயம் பசியால்...