×

ஆகஸ்ட் 1ம் தேதி 10,000 மாணவர்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஹேக்கத்தான் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் மோடி உரை!!


டெல்லி : டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாடு சந்தித்து வரும் சவால்களை போக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஹேக்கத்தான் எனப்படும் கணிப்பொறி தொடர் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்த உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதற்கு முன் நடைபெற்ற ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டி நிகழ்வுகளால் ஏற்பட்ட பயன்கள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்த கணிப்பொறி தொடர் நிகழ்வின் இறுதி போட்டியை நடத்த இருப்பதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் தொழில்நுட்பத்தில் உள்ள சவால்களை போக்கும் வகையில், தொழில்நுட்ப கல்வி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடையிலான போட்டியான இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டி நிகழ்ச்சி தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் அரசு துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும்  அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் குறிப்பிட்டார்.

 இந்த ஆண்டிற்கான போட்டியில் 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் 37 மத்திய அரசு துறை நிறுவனங்கள், 17 மாநில அரசு துறை நிறுவனங்கள் மற்றும் 20 தொழில் நிறுவனங்களில் நிலவும் 243 தொழில்நுட்ப சவால்களுக்கு இந்த போட்டி மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Tags : Modi ,finale ,speech ,world , August 1, 10,000 students, the world's largest, online, hackathon, final, Prime Minister Modi, speech
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...