×

கொரோனாவால் உயிரிழந்த ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவர்: தொற்று சிகிச்சை குறித்து ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு..!!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் சாந்திலால் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், கடந்த 5 தினங்களுக்கு முன்பு, தான் இறந்து விட வாய்ப்பு உள்ளதாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோ நேற்று முன்தினம் முதல் ராஜபாளையத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஆடியோவில் ஹெலோ நான் சாந்திலால் பேசுகிறேன். அநேகமாக இன்று அல்லது நாளைக்குள் இறந்துவிடுவேன். எல்லாருக்கும் போயிட்டு வர்றேன். ரொம்ப நன்றி என்று தெரிவித்து இருந்தார். மேலும் கொரோனாவுக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகல் எதுவும் சரியில்லை. எனக்கு மூச்சு வாங்குகிறது. ஆக்ஸிஜன் சிகிச்சை அரையும் குறையுமாக வைக்கிறார்கள். சிகிச்சை சரியில்லை. அவ்வளவுதான். என் கடைசி கட்டம் எனத் தெரிவித்த நிலையில் இந்த ஆடியோ பகிரப்பட்டது.

இந்த நிலையில் , ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் மன உளைச்சல் காரணமாக அவர் இவ்வாறு பேசி ஆடியோ வெளியிட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : doctor ,release ,Rajapalayam , Corona, Private Physician, Audio, Excitement
× RELATED இந்தி தெரியாது என்பதால்...