×

திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை சமூக வலைத்தளங்களின் உதவியால் 6 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு!

திருப்பூர்: திருப்பூரில் வீட்டின் அருகே விளையாடிய போது கடத்தப்பட்ட 4 வயது குழந்தை சமூக வலைத்தளங்களின் உதவியால் அடுத்த 6 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது. திருப்பூரை சேர்ந்த காஜா மைதீன் என்பவரது 4 வயது குழந்தை ஜாகித் அகமது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மர்மநபர்கள் கடத்தி சென்றுவிட்டனர். இதையடுத்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்த காஜா மைதீன், குழந்தையின் புகைப்படம் மற்றும் விவரங்களை வாட்ஸ் அப் குரூப்களில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட காவல்துறையும் குழந்தை குறித்த விவரங்களை பேஸ்புக்கில் பதிவிட்டது. திருப்பூர் முழுவதும் குழந்தை கடத்தல் செய்தி வேகமாக பரவியதால் அனைவரும் தீவிரமாக தேடினர். இதனால் கடத்தல் கும்பல் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குழந்தையுடன் தப்ப முடியாது என்பதை உணர்த்த கடத்தல் காரர்கள் காவல் நிலையம் அருகே குழந்தையை இறக்கிவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள், மோதல்கள் ஏற்பட்டாலும் அதனை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் நடக்கும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக உள்ளது. இந்த செய்தியை பகிர்ந்து உதவிய அனைவருக்கும் திருப்பூர் மாநகர காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Tirupur , Child abducted , Tirupur ,rescued ,social media!
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு