×

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா.வுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சனா சோரங் நியமனம்!!

டெல்லி : இந்தியாவைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர் அர்ச்சனா சோரெங் என்பவரை தனது ஆலோசனைக் குழுவில் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா கட்டரஸ் சேர்த்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா.வுக்கு ஆலோசனை கூறுவதற்காக 6 பேர் கொண்ட குழுவை ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா கட்டரஸ் அமைத்துள்ளார். மோசமான காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழிகாட்டுதலையும் தீர்வுகளையும் இந்த குழு வழங்கும். இதில் இடம்பெற்றுள்ள அனைவருமே 18- 28 வயது உடையவர்கள்.
அர்ச்சனா சோரெங் “காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் அனுபவம் வாய்ந்தவர்.

மேலும் பழங்குடி சமூகங்களின் பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் அவர் பணியாற்றி வருகிறார்” என்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.மும்பை டாடா Tata Institute of Social Sciences-ல் ஒழுங்குமுறை நிர்வாகம் பயின்றவரான அர்ச்சனா சோரெங், “எங்கள் முன்னோர்கள் தங்கள் பாரம்பரிய அறிவு மற்றும் நடைமுறைகள் மூலம் பல காலங்களாக காடுகளையும் இயற்கையையும் பாதுகாத்து வருகின்றனர். இப்போது காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் நாமே முன்னணியில் இருக்கிறோம்” என்று கூறினார். இதனிடையே ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : India ,Archana Sorang ,UN Advisory Committee on Climate Change , Climate Change, Change, UN, Advisory, Committee, India, Rchana Sorang, Appointment
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!