×

இந்திய இளைஞர்கள் வேலை கேட்பார்கள் என்பதால் பப்ஜியை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை!: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கிண்டல்..!!

டெல்லி: இந்திய இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுவிடுவார்கள் என்பதால் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி, இதனை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பப்ஜி விளையாட்டை தடை செய்ய மோடி விரும்புவது உண்மைதான் என்றும், ஆனால் இதுபோன்றதொரு கற்பனை உலகத்தின் தடைகள் இல்லை என்றால் உண்மையான உலகத்திற்கான விஷயங்களான வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை இளைஞர்கள் கேட்பார்கள் என்பதை மோடி உணர்ந்துள்ளார் என்றும் சிங்வி கிண்டல் செய்துள்ளார். இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை அடிமைப்படுத்தி மூர்க்க வெறிகொள்ள செய்யும் விளையாட்டுகளில் ஒன்றாக பப்ஜி விளையாட்டு மாறியுள்ளது.

ப்ளூ வேல் போன்ற உயிர்கொல்லி விளையாட்டாக மாறியுள்ள இதனை தடை செய்ய பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 17 கோடியே 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சீன செயலிகளை தடை செய்தது போன்றே தென்கொரிய தயாரிப்பான பப்ஜியையும் தடை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Tags : government ,Abhishek Singh ,Babji ,Indian ,Congress , pubg ,abhishek singhvi,central government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்