×

கந்தா்வகோட்டையில் சாலையில் நிலக்கடலை உலர்த்தும் அவலம்: உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களை உலர்த்த உலர்களம் இல்லாத காரணத்தினால் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலைகளில் உலா்த்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிடும் சோளம், கடலை, எள் போன்ற பயிர்களை உலா்த்த சாியான உலா்களம் இல்லாத காரணத்தினால் புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் பயன்படுத்துகிறார்கள். மேலும் பட்டுக்கோட்டை சாலையிலும் உலர்த்துகின்றனர்.

கந்தா–்வகோட்டை அருகே வளவம்பட்டியில் நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் கடலை விவசாயி தான் சாகுபடி செய்த கடலைகளை உலா்த்திவிட்டு அசதியால் வெயிலில் டெண்ட் அமைத்து சாலையிலேயே தூங்கி வருகிறார். உலா்களம் இல்லாத காரணத்தினால் சாலையை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு சில சமயம் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் அதிகமாக எந்த பகுதியில் விளைச்சல் உள்ளதோ அந்த பகுதிகளில் உலா்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road , Kandavakottai, groundnut, dry field, farmers
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி