×

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் சிவசங்கரனிடம் இன்று மீண்டும் விசாரணை!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் இன்றும் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய 9 மணி நேர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கேரள அரசியலில் புயலை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் சுற்றிவளைக்கப்பட்ட சிவசங்கர் ஐ.ஏ.எஸ் - யிடம் நேற்று கொச்சியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

தங்கக்கடத்தலில் முக்கிய சூத்திரக்காரர்களில் ஒருவரான தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னாவுடன் சிவசங்கர் நெருங்கிய தொடர்பில் இருந்தது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நாளன்று ஸ்வப்னா கூட்டாளிகளிடம் சிவசங்கர் பலமுறை செல்போனில் பேசியது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பல கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காத சிவசங்கர், தாம் ஸ்வப்னா இணைத்துக் கொடுத்த அழைப்புகளில் மட்டுமே பேசியதாக கூறியுள்ளார்.

ஆனால் தனது சொந்த செல்போன் எண்ணில் இருந்து மேற்கொண்ட அழைப்புகள் குறித்து பதிலளிக்க சிவசங்கர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் சிவசங்கரனிடம் இன்று மீண்டும் விசாரணை தொடங்கவுள்ளது. ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரமும், சுங்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமும் விசாரித்துள்ளனர். தங்க கடத்தல் வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்கும் நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கரை கைது செய்ய கூடுதல் ஆதாரங்களை என்.ஐ.ஏ. மற்றும் சுங்கத்துறை திரட்டி வருகின்றன.

Tags : Kerala ,Sivasankaran , Kerala gold smuggling case,IAS shivashankar
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...