×

பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் உட்பட 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!: கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடல்!!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உட்பட 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்னர் பெண் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் பிரிவில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3788 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1602 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூரில் நகராட்சி ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், சக ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூரில் மேலும் 109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 2521ஆக அதிகரித்துள்ளது.

Tags : Municipal Commissioner ,Pollachi ,Corona ,office , Corona ,Pollachi Municipal Commissioner,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...