×

இந்தியாவில் பாதிப்பு 15 லட்சமாக அதிகரித்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை 9.50 லட்சமாக உயர்ந்தது!!

புதுடெல்லி: உலக அளவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 47,703 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 14,83,156 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 654 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை  33,425 ஆக அதிகரித்துள்ளது.

* 9 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் பாதிப்பு அதிகரித்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 9,52,743 பேர் குணமடைந்துள்ளனர். 4,96,988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 2-வது நாளாக 24 மணி நேரத்தில் 5 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. 26-ம் தேதி 5.51 லட்சம், 27-ம் தேதி 5.28 லட்சம் கொரோன மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.


பாதிப்பு விவரங்கள் மாநிலங்கள் வாரியாக :

மகாராஷ்டிராவில் நேற்று 7,924 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,83,723ஆகி உள்ளது  நேற்று 227 பேர் உயிரிழந்து மொத்தம் 13,883 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,706 பேர் குணமடைந்து மொத்தம் 2,21,944 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,993 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிரிழந்து மொத்தம் 3,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,723 பேர் குணமடைந்து மொத்தம் 1,62,249 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டெல்லியில் நேற்று 613 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,31,349 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிரிழந்து மொத்தம் 3,853 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,497 பேர் குணமடைந்து மொத்தம் 1,16,372 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,051 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,02,349 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிரிழந்து மொத்தம் 1090 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,257 பேர் குணமடைந்து மொத்தம் 49,558 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,324 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,01,466 ஆகி உள்ளது  இதில் நேற்று 73 பேர் உயிரிழந்து இதுவரை மொத்தம் 1,953 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,847 பேர் குணமடைந்து மொத்தம் 37,685 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.



Tags : India ,healers ,persons , India, vulnerability, 15 lakhs, healers, number, 9.50 lakhs
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...