புதுச்சேரியில் முதல் அரசியல் பிரமுகர் பலி.! என்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனாவால் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் (67) கொரோனா பாதிப்பால் இன்று காலை உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் நியமன எம்எல்ஏ-வான பாலன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 23-ம் தேதி அவர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலன் உயிரிழந்தார். அவருக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் அரசியல் பிரமுகர் பாலன் ஆவார்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையாமல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுவரை 2872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 1720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 44 பேர் கொரோனவுக்கு உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் நகராட்சி தலைவர் கொரோனாவுக்கு பலி:

விருதுநகர் ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் தலைவர் தனலட்சுமி கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் சாந்திலாலு கொரோனாவால் உயிரிழந்தார். சாந்திலாலும் எழுத்தாளரும் மற்றும் மருத்துவர் ஆவார்.

Related Stories:

>