×

விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் சேகர்(47). இவர் தமிழக காவல் துறையில் 16.3.1994ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து தற்போது சென்னை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக  

பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்த ஊர் காட்பாடி. இவர், மதுரவாயலில் சொந்தமாக வீடு கட்டி மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். ஆயுதப்படையில் பணியாற்றி வந்த சேகருக்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின்

மாநில தலைவர் வேதாந்தத்துக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வேதாந்தம் சென்னை தி.நகர் பார்த்தசாரதிபுரம் ராமானுஜம் தெருவில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது

சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரும் உடன் வந்தார்.

பிறகு அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறைக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் சென்றார். சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது. அதை கேட்டு அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி

வந்து பார்த்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், தனது கையில் வைத்திருந்த சிறிய வகை துப்பாக்கியால் வலது பக்க தலையில் வைத்து விசையை அழுத்தி தற்கொலை ெசய்து கொண்டார்.இதில்

அவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாம்பலம் போலீசார் சேகர்

இறந்து கிடந்த அறையில் சோதனை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முன்பு சேகர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில் “நான் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் தேசியமாயமாக்கப்பட்ட

வங்கியில் கடன் வாங்கியிருந்ததேன்.

வாங்கிய கடனை என்னால் திரும்ப கட்ட முடியவில்லை. இதனால் தினமும் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை முடிவை எடுக்கிறேன்” இவ்வாறு அந்த கடிதத்தில் சேகர் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்
தனர்.இருந்தாலும், போலீசார் சேகரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மன அழுத்தத்திற்காக காரணம் குறித்து அவரது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த

சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : SI ,Vishwa Hindu Parishad ,security guard ,office , Vishwa Hindu Parishad office, security duty, SI, shot, suicide
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’