நடிகை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் சூடுபிடிக்கிறது விஜயலட்சுமி வாக்குமூலம் சீமான் மீது வழக்கு?

சென்னை: ‘இதுதான் எனது கடைசி வீடியோ’ என்று கூறி வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரிடம், எழும்பூர் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாக்குமூலம்

பெற்றுள்ளார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹரி நாடார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பூந்தோட்டம், பிரண்ட்ஸ், கலகலப்பு,

மிலிட்டரி, ராமச்சந்திரா, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர். சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் அவர் நடித்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறியது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதைதொடர்ந்து நாம் தமிழர் கட்சி

ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி என்னுடன் 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சீமான் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தனர். தற்போது

அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நடிகை விஜயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி சீமான் குறித்து வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது.

இந்நிலையில், சீமானுக்கு எதிராக வெளியிடப்பட்ட வீடியோவிற்கு ஹரிநாடார் என்பவர் ஒரு பதில் வீடியோ வெளியிட்டார். இதற்கிடையில், திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்த நடிகை

விஜயலட்சுமி, நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் குறித்தும் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டு ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு

முயன்றார். பேஸ்புக் நேரலையில் நடிகை விஜயலட்சுமி ‘இதுதான் எனது கடைசி வீடியோ’ என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது விஜயலட்சுமியின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசார் நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று மயக்க நிலையில் இருந்த அவரை, மீட்டு அடையாறு பகுதியிலுள்ள

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை காரணமாக நடிகை விஜயலட்சுமி தற்போது நலமாக உள்ளார். அதேநேரம், எழும்பூர் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் அடையாறில்

உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் குறித்தும், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் விரிவாகவும், உரிய ஆதாரங்களுடனும் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக

கூறப்படுகிறது. நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் எழுத்துபூர்மாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். பிறகு நடிகை விஜயலட்சுமி சீமான் மற்றும் ஹரி நாடார் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்

நிலையில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணையை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹரி நாடார் மீது வழக்குப்பதிவு

செய்வது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருவர் மீதும் இன்றுக்குள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: