×

விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய

சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜ அரசு முயற்சி செய்கிறது. இதுபோன்ற மக்கள் விரோத இந்த சட்டங்களை கண்டித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையொட்டி மதிமுக சார்பில், வேளாண் தொழில்களை நசுக்கும் அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மகேஷ்

வரவேற்றார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்  அருள், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், நெசவாளர் அணி ஏகாம்பரம், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், நகர பொருளாளர் உமாசங்கர், மறுமலர்ச்சி தொமுச ராமானுஜம், நகர இளைஞர் அணி சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சாரங்கன், சங்கர், லாரண்ஸ், ஜீவா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பாண்டியன், கமலநாதன்,

மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டேவிட், மக்கள் மன்றம் சார்பில் மகேஷ், ஜெசி ஆகியோரும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அச்சிறுப்பாக்கத்தில் அமைப்பு செயலாளர்

ஷாஜஹான், செங்கல்பட்டில் மாவட்ட தலைவர் யூனுஸ் என செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Tags : Farmers, black flag, demonstration
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...