×

மின்சாரம் பாய்ந்து மாடு பலி, சிறுவன் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பவுஞ்சூரை அடுத்த கடுகப்பட்டு கிராமத்திற்கு, கடுகப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில்

செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள், பலமுறை மின்வாரிய  துறையிடம் புகார் அளித்தனர். ஆனால், எநத நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சுரேந்தர் (12). இவர்களது வீட்டில் மாடுகளை வளர்க்கின்றனர். நேற்று மதியம் 2 மணியளவில் சுரேந்தர், தங்களது மாட்டை விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தான். அப்போது, தாழ்வாக இருந்த மின்வயரில் சிக்கி மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதை அறியாத சிறுவன், மாட்டை தொட்டபோது, அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான்.

இதை பார்த்ததும், அங்கிருந்த மக்கள், ஓடி வந்து, உடனடியாக சிறுவனை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், கடுகப்பட்டு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து செய்யூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.  தொடர்ந்து மாடு பலியான இடத்துக்கு சென்று பார்வையிட்ட அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சாலை மறியலால்  பவுஞ்சூர் - கூவத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : blockade ,road , Electricity flow, cow killed, boy injured, civilians, road block
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை