×

அரசு நிலம் ஆக்கிரமிப்பு என கூறி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

செய்யூர்: மதுராந்தகம் அருகே தச்சூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை மீட்டு விளையாட்டு

மைதானம் அமைக்க வேண்டும் எனக்கோரி, அப்பகுதி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை படாளம்- பவுஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அணைக்கட்டு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறும் நிலம் குறிப்பிட்ட தனியாருக்கு சொந்தமானது. அதை தவிர்த்து வேறு ஒரு பகுதியில் விளையாட்டு திடல் ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : road blockade , Government land occupation, villagers, road blockade
× RELATED விவசாய சங்கத்தினர் சாலை மறியல்