×

மீண்டும் போக்குவரத்து பிரச்னையா? தேர்வு எழுத வராத மாணவர்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 இறுதித் தேர்வில் கணக்குப்பதிவியல், புவியியல், வேதியியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது. ஊரடங்கால் பெரும்பாலான மாணவர்கள் இத் தேர்வில் பங்கேற்கவில்லை.

தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து அவர்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 846 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளதாகவும், அவர்களுக்காக 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை தெரிவித்தது. இதில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோர் 171, தனித் தேர்வர்கள் 572 பேர். சென்னையில் மட்டும் 9 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். 9 மாணவருக்கும் தலா 1 தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தவிர 94 தனித் தேர்வர்களுக்காக சென்னையில் 11 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மாணவர்கள் வந்து செல்ல வசதியாக பஸ் போக்கு வரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில் 9 மணி வரையும் எந்த மாணவர்களும் தேர்வு மையத்துக்கு வரவில்லை என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியது. கல்வி அதிகாரிகளும் மாணவர்கள் வருகைக்காக

காத்திருந்தனர். இந்நிலையில், எம்ஜிஆர் நகர் பள்ளி, அசோக்நகர் பெண்கள் மேனிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர்.  காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வின் விடைத்தாள்கள் நாளை முதல் திருத்த உள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

Tags : Traffic again, problem? , Students, officials shocked not to write the exam
× RELATED தமிழகத்தில் ஆன்லைன் கல்வியில்...