சித்தூர் விவசாயி மகள்களின் கல்விச் செலவை ஏற்ற சந்திரபாபு

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்த விவசாயி நாகராஜ், போதிய வருமானம் இல்லாததால் தனது இரு மகள்களை வைத்து ஏர் உழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. உடனடியாக அவர்களுக்கு

புதிய டிராக்டரை வழங்கி நடிகர் சோனு சூட் உதவினார். ‘விவசாயியின் மகள்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என சோனு சூட் கூறினார். இதைத் தொடர்ந்து, சோனு சூட்டுக்கு பாராட்டு தெரிவித்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, விவசாயி மகள்களின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘விவசாயி மகள்களின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அவர்களின் கல்விக் கனவு நனவாகட்டும்’’ என கூறி உள்ளார்.

Related Stories:

>