×

கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சி பெயர் பலகையில் காவி சாயம் பூச்சு

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் கச்சிராயபாளையத்தில் இருந்து வெள்ளிமலைக்கு செல்லும் வழியில் பெரியார் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் அங்குள்ள நீர்வீழ்ச்சி பெயர் பலகையில் பெரியார் என்ற வார்த்தைக்கு சில விஷமிகள் காவி சாயம் பூசியுள்ளனர். இது அங்கு குளிக்க சென்ற சிலர் மூலம் காட்டு தீயாய் பரவியது. இதற்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை சுயமரியாதை மண்ணாக்கிய பெரியாரை இதுபோன்ற செயல்களால் இழிவுபடுத்தி விடலாம் என நினைக்கும் கயவர்களை கண்டுபிடித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைவரின் ஒப்புதல் பெற்று மலைமக்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று  கூறி உள்ளார்.


Tags : Kalvarayanmalai Periyar Falls , Kalvarayanmalai, Periyar Falls, name plate, saffron paint finish
× RELATED ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அனுமதியின்றி...