×

கொரோனா தாக்கி இறந்தவர்களில் 60-69 வயதுள்ளவர்களே அதிகம்: தொற்றில் இளம் வயதினருக்கு முதலிடம்

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களில் 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக தொற்று பாதிப்பில் இளம் வயதினர் முதலிடத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஜூன் 26ம் தேதி வரை 94 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 78 ஆயிரத்து 960 பேர் குணமடைந்தனர். அதில் 13 ஆயிரத்து 744 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 2011 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் 30 முதல் 39 வயதுள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணம் அடைந்தவர்களில் 60 முதல் 69 வயதினர் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. ஜூலை 24ம் தேதி நிலவரப்படி சென்னையில் 92 ஆயிரத்து 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதுக்குட்பட்ட 17 ஆயிரத்து 604 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்தபடியாக 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 16 ஆயிரத்து 641 பேருக்கும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 16 ஆயிரத்து 563 பேருக்கும், 50 முதல் 59 வயதுக்குட்பட்ட 14 ஆயிரத்து 592 பேருக்கும், 60 முதல் 69 வயதுக்குட்பட்ட 8,818 பேருக்கும், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 6,255 பேருக்கும், 70 முதல் 79 வயதுக்குட்பட்ட 4,196 பேருக்கும், 9 வயதிக்குட்பட்ட 2,961 பேருக்கும், 80 வயதுக்குபட்ட 1,463 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ஜூலை 24ம் தேதி வரை 1,969 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 60 முதல் 69 வயதுக்குட்பட்ட 542 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 70 மற்றும் 79 வயதுக்குட்பட்ட 467 பேர், 50 முதல் 59 வயதுக்குட்பட்ட 401 பேர், 80 வயதிற்கு மேற்பட்ட 256 பேர், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 189 பேரும், 30 முதல் 39 வயதுக்குட்பட்ட 69 பேர், 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 21 பேர், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 4 பேர், 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Tags : coronavirus deaths ,corona attack ,teenagers , Corona attack and death, 60-69 years old, most common, young people infected, first
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...