×

சீனாவின் பதிலடி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது

பீஜிங்: அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தனிநபர் தகவல்கள் திருட்டு நடப்பதால், அதனை மூட அதிபர் டிரம்ப் நிர்வாகம் 72 மணி நேர கெடு விதித்தது. அதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் சீன தூதரகம் மூடப்பட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில், சீனாவின் செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கிய அனுமதியை சீன அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முறைப்படி, செங்டுவில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. தூதரகத்தின் மீது பறந்த அமெரிக்காவின் தேசிய கொடி இறக்கப்பட்டுள்ளது. தூதரகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.


Tags : China ,US ,embassy , China, retaliation, US embassy, closed
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...