×

கர்நாடக வனப்பகுதியில் சிவப்பு நிறத்தில் காட்டு மாடுகள்: வனத்துறையினர் வியப்பு

சிக்கமகளூரு: கர்நாடக மாநிலத்தின் முத்தோடி வனப்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட காட்டு மாடுகள் தென்பட்டதால் வனத்துறையினர் வியப்படைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பத்ரா புலிகள் பாதுகாப்பு முத்தோடி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சிவப்பு நிறத்தில் இரண்டு காட்டு மாடுகள் தென்பட்டன. இது வனத்துறையினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘வழக்கமாக காட்டு மாடுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் சில நேரங்களில் வனபகுதிக்குள் வெள்ளை புலி, சிங்கம், கருஞ்சிறுத்தை என பல்வேறு நிறங்களில் வனவிலங்குகள் தென்படுவது வழக்கம். அதேபோல், தற்போது அபூர்வமாக சிவப்பு நிறத்தில் காட்டு மாடுகள் இருந்தது. அவற்றை பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது’’ என்றனர்.

காட்டுமாடுகள் பொதுவாக கருப்பு நிறத்தில்தான் காணப்படும். கேரள மாநிலம் சின்னார் வனப்பகுதியில் வெள்ளை நிற காட்டு மாடுகள் (Albino gaur) பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஊட்டி தேயிலை தோட்டத்தில் கருப்பு - வெள்ளை திட்டுக்களுடன் கூடிய காட்டு மாடு (Leucistic Gaur) காணப்பட்டன. இதுபோல், கர்நாடக மாநிலம சிக்கமகளூர் பகுதியில் சிவப்பு நிற காட்டு மாடுகள் காணப்பட்டுள்ளன. ரத்த அணுக்கள் குறைபாடு காரணமாகவே இத்தகைய நிறமாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை காண்பதற்கு அரிதாகவும், அதிசயமானதாகவும் இருந்தாலும், நோயினால் ஏற்பட்ட குறைபாடே இத்தகைய மாற்றத்துக்கு காரணம். பலராலும் அரிது என கொண்டாடப்படும் கருஞ்சிறுத்தைகள் கூட, இதுபோன்று ரத்த அணு குறைபாடு காரணமாக நிறமாற்றம் ஏற்பட்டவைதான் என காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : forests ,Foresters ,Karnataka , Carnatic forest, red, wild cows, foresters amaze
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை