×

கர்நாடகாவில் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை: முதல்வர் எடியூரப்பா மீண்டும் திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இனி ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடியூரப்பா மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார். பெங்களூரு விதான சவுதா வரவேற்பு அரங்கில் மாநில அரசின் முதல் வருட சாதனை விழா நேற்று நடந்தது. இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் பாஜ அரசின் ஒரு வருட சாதனை புத்தகத்தை முதல்வர் எடியூரப்பா வெளியிட்டு பேசியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டது. கொரோனாவின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நெசவாளர், விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் இன்னல்களை தீர்க்கும் வகையில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே மாநில அரசின் முக்கிய நோக்கமாகும். இன்னும் மூன்று வருடத்தில் பெங்களூரு உலகத்திற்கே மாதிரியான நகரம் என்ற பெருமை அடையும் வகையில் அதன் தோற்றம் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். மேகதாது திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஏற்கனவே கொரோனாவின் காரணமாக அதிக நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. எனவே,  மாநிலத்தில் இனி ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Eduyurappa ,Karnataka , Karnataka, curfew, no talk, no Chief Minister Eduyurappa, plan
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!