×

சென்னை பல்கலை அஞ்சல் வழிக்கல்வி டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கை

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, முதுநிலை வணிக நிர்வாகவியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த சேர்க்கை இணையதளம் மூலம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் http://online.ideunom.ac.in மூலம் சேரலாம். மாணவர்கள் சேர்க்கை சென்னைப் பல்கலைக்கழகத்தின் 115 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம். இது தொடர்பான முழு விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Tags : Chennai ,University , University of Chennai, Post Graduate Education, Diploma Course, Student Admission
× RELATED முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை