×

கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரிடம் 9 மணி நேரமாக விசாரணை

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரிடம் 9 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் 56 கேள்விகளுக்கு சிவசங்கர் அளிக்கும் பதில் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. சிவசங்கரிடம் நடத்தப்படும் விசாரணை டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தங்கக்கடத்தல் குறித்து நீடிக்கும் விசாரணையால் சிவசங்கரன் கைதாக வாய்ப்புள்ளது. சிவசங்கர் கைதானால் பினராயி விஜயன் அரசுக்கு சிக்கல் ஏற்படும்.

கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு, இந்த கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகளும், சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரித்தனர். இந்த 2 விசாரணையின் போதும் சிவசங்கர் கூறிய பதில்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இன்று கொச்சியில் என்ஐஏ விசாரணைக்காக சிவசங்கர் மீண்டும் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.



Tags : Sivasankar ,IAS ,Kerala ,arrest ,Binarayi Vijayan ,Swapna , Kerala gold smuggling, arrest, Sivasankar, Binarayi Vijayan, Swapna
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...