×

மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் தீர்ப்புச் செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன் : சீமான்!!

சென்னை : மருத்துவ படிப்பில், ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, கலந்தாலோசித்து, இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுத்து, 3 மாதங்களில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புச் செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட‌ தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்! சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன், என்றார்.


Tags : government ,Seaman , Students, 50 per cent, reservation, federal government, judgment, news, pride, seaman
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...