×

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்பந்தத்தை மீறுகிறது அமெரிக்கா: உலக நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரிப்பு

வாஷிங்டன்: ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு 35 நாடுகளிடம் பெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா அதன் 35 நட்பு நாடுகளுக்கு ஏவுகணைகள் மற்றும் அதனை சார்ந்த போர் கருவிகளை விற்பனை அனுமதி இல்லை என கையெழுத்திட்டது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது போர் கருவிகள் தயாரிக்கும் வர்த்தகத்தை பெருக்க முயல்கிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் போர் கருவிகள் தயாரிப்பில் ஈடுபடத் துவங்கும். அமெரிக்கா தவிர பிற வல்லரசு நாடுகளும் இந்த கருவிகளை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்தால் உலக நாடுகளிடையே போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக சமாதானம் மற்றும் ஏவுகணை தடுப்புக்காக ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. உலகில் எந்த நாடும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்யக்கூடாது என்னும் கொள்கையை வலியுறுத்தும் வகையிலேயே உலக நாடுகள் இந்த முடிவை ஒருமனதாக ஏற்றனர். இதனால் உலகின் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் ஏவுகணை பயன்படுத்தப்படாது என உறுதி அளிக்கப்பட்டது.

ஆர்ம்டு ட்ரோன்ஸ் எனப்படும் போர்களில் பயன்படுத்தப்படும் கருவி தற்போது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனுமதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார். ஆனால் இந்த கருவியில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்படவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதாவது மணிக்கு 800 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆர்ம்டு ட்ரோன்கள் மிகவும் ஆபத்தானவை. இவை போர்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். தற்போது அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆர்ம்டு ட்ரோன்கள் 800 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாகவே செல்லும் அளவுக்கு அதன் வேகத்தைக் குறைத்து ட்ரம்ப் ஒப்பந்தமிட்டுள்ளார்.



Tags : US ,War , Missile, USA, War
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...