பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்!!

மும்பை :கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். கடந்த 10 நாட்களாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 பேரும் வீடு திரும்பினர்.

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்து மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி தெரிய வந்தது.

இதையடுத்து ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை 18ம் தேதி திடீர் என்று நானாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஐஸ்வர்யாவுக்கும், ஆராத்யாவுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தான் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.அமிதாப் வீட்டில் அவரின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சனுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை.

அபிஷேக் பச்சன் டீவீட்

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனை அபிஷேக் பச்சன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.அந்த பதிவில்,  கொரோனா பரிசோதனையில் மனைவி ஐஸ்வர்யா ராய் ,மகள் ஆராத்யாவுக்கு நெகட்டிவ் என வந்ததால், அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் இருப்பினும் தானும் தனது தந்தை அமிதாப் பச்சனும் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>