×

தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை!!!

எர்ணாகுளம்:  கேரளாவை உலுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகள் மட்டுமின்றி டெல்லி, ஐதராபாத்தை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2வது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி திருவனந்தபுரத்திலிருந்து அதிகாலை 4 மணியளவில் புறப்பட்டு, 9:30 மணியளவில் கொச்சியை வந்தடைந்தார்.

பின்னர் விசாரணையானது 10 மணியளவில் தொடங்கப்பட்டது. இதற்காக என்.ஐ.ஏ அலுவலகத்தில் பிரத்தியேக அறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்தான் தற்போது விசாரணையாது நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகள் மட்டும்தான் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள டெல்லி மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் சரமாரியாக பல கேள்விகளை துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

அதாவது , தங்கராணி ஸ்வப்னாவின் தங்கக்கடத்தல் ரகசியம் முழுவதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தெரியும் என்பதால் 2வது முறையாக அவரை விசாரணைக்குட்ப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகாரியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஸ்வப்னா, சந்தீப், சரீத் ஆகிய 3வரும் நட்பு அடிப்படியில் மட்டுமே தெரியும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மேலும் விசாரணை மேற்கொள்வதன் மூலம் பல தகவல்களை பெற முடியும் என்பதற்காக தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் எவ்விதமாக கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்பது தொடர்பாக சுமார் 56 கேள்விகள் அடங்கிய பட்டியலை என்.ஐ.ஏ அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளன.

அதன் அடிப்படையில்தான் தற்போது விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுஒருபுறம் இருக்க மற்றொரு புறம், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜூலை 3ம் தேதி ஸ்வப்னாவும் தூதரக அதிகாரிகளும் சுமார் 22 முறை தொடர்பு கொண்டு தங்கக்கடத்தல் தொடர்பாக பேசியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் ஜூலை 5ம் தேதி யூ.ஏ.இ துணை தூதருடன் ஸ்வப்னா 8 முறை பேசியுள்ளார். இதுதொடர்பாக ஐக்கிய அமீரக தூதரங்கமும் தங்களுடைய விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர்கள் சுங்கத்துறை மற்றும் என்.ஐ ஏ அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெற்று அரசு துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Sivasankaran ,NIA ,IAS , NIA officials ,IAS officer Sivasankaran, gold smuggling case
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து