×

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க யுஜிசிக்கு உத்தரவு..!!

டெல்லி: நாடு முழுவதும் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரத்து செய்யகோரிய மனுக்கள் மீது பதில் அளிக்க யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்தத் தேர்வும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இருந்தனர்.

ஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு பெற்றதாக அறிவித்து, கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்த முடியாமல் ரத்து செய்வதாகத் தெரிவித்தன. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் , பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் பல்வேறு தரப்பில் இருந்து கிளம்பின. இதனையடுத்து இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த மனுக்கள் மீது 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : cancellation ,Supreme Court ,UGC , Final Year Exam, UGC, Supreme Court, Order
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...